தென்காசி:தென்காசி பேச்சியம்மன் கோயிலில் வரும் 25ம் தேதி கொடை விழா துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.தென்காசி மலையான் தெரு பேச்சியம்மன் கோயிலில் வரும் 25ம் தேதி கொடை விழா துவங்குகிறது. அன்று மாலையில் சொரிமுத்து ஐயனார் கோயிலில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. 26ம் தேதி மதியம் குற்றாலத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவு வில்லிசை கச்சேரி, சாம பூஜை நடக்கிறது.வரும் 27ம் தேதி வில்லிசை கச்சேரி, பட்டவராயன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.