ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார் திருநகரியில் ஆளவந்தார் திருநட்சத்திர திருவிழா நடந்தது. ஆழ்வார்திருநகரியில் எம்பெருமானார் சன்னதியில் ஆச்சாரியார்களான ஆளவந்தார் திருநட்சத்திர திருவிழா நடந்தது. இத்திருவிழாவில், தினமும் திருவாய்மொழி பாசுரங்கள் பாடப்பட்டு கோஷ்டி அனுஷ்டிக்கப்பட்டது . ஆடி உத்திராடத்தை முன்னிட்டு காலையில் நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி சாத்துமுறை நடந்தது. எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் உடனிருந்து நடத்தினார். அன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு திருவாராதனம் நடைபெற்று கோஷ்டியில் ஆளவந்தார் பிரசாதங்கள் எம்பெருமானுக்கு சாத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சீனிவாச ஐயங்கார் ய்திருந்தார். விழாவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், முன்னாள் தக்கார் ராஜப்பா வெங்கடாச்சாரி ற்றும் 50 நபர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.