பழநி: பழநி முருகன் மலை கோயிலுக்கு செல்ல ரோப் கார், வின்ச், படிப்பதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர் தற்போது மூன்று வின்ச்கள் செயல்பாட்டில் உள்ளன. வின்ச் பயன்படுத்தி பக்தர்கள் மேலே செல்ல 7 நிமிடங்கள் ஆகும். அதேபோல் தற்போது பயன்பாட்டில் உள்ள ரோப் காரில் மேலே செல்ல மூன்று நிமிடங்கள் ஆகும். இதில் தற்போது பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதன் அருகில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனால் எளிதாக அதிக நபர்கள், குறைந்த கால நேரத்தில் மலைக்கோயில் சென்று வரலாம். கொரோன தொற்று காலகட்டத்தில் இரண்டாவது ரோப்கார் பணிகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பாறைகளை உடைத்து அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இரண்டாவது ரோப்கார் விரைவில் அமைக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.