Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சூரிய புராணம் பகுதி-5 சூரிய புராணம் பகுதி-5 சூரிய புராணம் பகுதி-7 சூரிய புராணம் பகுதி-7
முதல் பக்கம் » சூர்ய புராணம்
சூரிய புராணம் பகுதி-6
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
16:52

சூரிய நமஸ்காரப் பதிகம் வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் பாலிப்பாய்-துன்னக், கடவாரணனே காண்பரிய காரணனே, யிடமாகு முன் மறைத்தாள்.

ஆசிரிய விருத்தம்

வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய்
மெய்ஞ்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில்
விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுதலைந்தெழுந்து பதேச மந்திரம்
உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி
ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள்
ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும்
ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு
சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !

இன்ப சுகமாகவும் பூமியாகாசமும்
ஏகாந்த வைபோகமும்
ஈரேழு பதினான்கு லோகங்களத்தனையும்
இரட்சிக்கும் ஈச்வரனுமாய்
அம்பரதி கம்பர பரம்பர வநாகத
அநாதி யொளியான வெளியாய்
ஆனந்த நடன மிடு முத்தண்டமாகவே
யாடிய சபாபதியுமாய்
வம்பரோடு காலன் எமதூதரணு காமலே
வந்தருள் புரிந்து நிதமும்
வளர்கின்ற கைலாச பரமபத கொடி முடியின்
வரையினை வணங்கி முடிவார்
துன்பமெனு நரகவழி வீழாமல் ரட்சியுஞ்
சோதி ரத மீதேறிய
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !

சாஸ்திர புராண முதல் வேத வேதாந்தமிகு
சர்வத் தபோதனர்களுஞ்
சகலமான தேவருஞ் சகலமான முனிவர்களுஞ்
சகல சீவன்களுடனே
நேத்திரமதாகவே குறியாகி நெறியாக
நிருமல சொரூபமாகி
நிகழும் சிருஷ்டி திதி சம்மாரவதிகார
நின்ற திரி மூர்த்தியாகி
காத்திரமதாய ஐந்து பஞ்சபூதங்களும்
கருணா கடாட்ச முடனே
கண்டு களிகூர்ந்திடும் விண்ட பரிபூரண
கலைக்கியான வேதமுதலே
சூத்திரந் தாவி விளையாடு மானந்தச்
சுயம்பு ரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

நிறையான சுக்கிலஞ் சுரோணிதக் கருவூரி
னின்று மொன்றாகவேதான்
நிலையான முக்கோண சக்கரந் தன்னிலே
நிதாகார கமலமீதில்
விரைவான நிலைவீடு மறுகோண மாகியும்
ஆங்கார ஓங்காரமாய்
ஆடிவிளை யாடி நட மாடிய பராபர
அச்சு தானந்த மெனவே
குறையான அன்னையின் கர்ப்பமதில் வாசமுங்
குடியாக முந்நூறு நாட்
கொண்ட ஓர் தாவதனை விண்டுபின் பூமியிற்
குழந்தையாய் வந்து வளரும்
துறையான பாதவழி வீழாமலே செய்ய
சொர்ணரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

ரத்தமொடு மாமிசமு மத்தியோடு ரோமமும்
நரம்பு தோலெலும்பு மயிரும்
நாடியொடு சிலேத்துமமும் வாத பித்தங்களும்
நாரும் சீதச வாயுவுடன்
சுத்த பரிசுத்தமொடு ரூபரச கெந்தமமுஞ்
சுக்லாதிதப் பொருளுமாய்ச்
சரணார விந்தமிகு கண்களிரு வகையுமாய்
சார்வையிரு நா பியுடனே
உற்ற கமலந்தனி லுற்ற வுயிரறவே
ஊடாடி நின்ற வுணர்வாய்
ஓங்கார ரீங்கார வாங்கார ரூபமா
யோரெழுத் தாகவே தான்
சுத்த கெம்பீர பரிபூரண விலாசமிகு
சூட்சும ரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

நிலையில்லாச் சமுசார வாழ்வை நிஜமென்றெண்ணி
நினைவு தடுமாறாமலும்
நிஜரூபமாகவேகாட்சி தந் தெனையாண்டு
நியமிக்க விது சமயமே
அலையாம லீரேழு பதினான்கு லோகமும்
அணுவுக்கு ளணுவாகியே
அரியர பிரம்மாதி யவதார சிங்கார
அகோர அக்கினி ரூபமாய்
மலையாள கைலாச கிரிகளோடு பரமபதம்
மகமேரு வைகுந்தமும்
வாசமிகு வானதொரு வீதி யாகாயமதில்
வளரும் பிரகாசவொளியே
தொலையாத சளனமதில் முன்செய்த தீவினைத்
துயர்தீர ரத மேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

வழியென்ற துறைகணிலைகள றியாமலே
மனது மிகவே கலங்கி
மாதர்தம் சுகமான வாசைதனை நிசமென்று
மண்ணுலகிலேயலைந்து
பழியென்ற தீவினை யகற்றி விடுமுன் பாதம்
பணியவே யருளுமில்லான்
பாழுமென் மனங்குவிய ஓன்று தரிதம்பனம்
பண்ணுவ துனக்கருமையோ
விதி என்ற கண்ணொளியாகவே நின்றுவிளை
யாடுமணி ரூபமாகி
மேலான செல்வமது தந்தருள் புரிந்திடும்
வேத வேதாந்த முதலே
சுழியென்ற முனை மீதில் ஒங்காரமான அதி
சூட்சுமரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

அட்ட திசையெட்டுடன் பதினாறுகோணமும்
அகண்டதொரு கால மீதில்
ஆகாசமீதில் வெகு சோதிப் பிரகாசமாய்
அலங்கார தீபசுடரே
கட்டமதுவான தொரு கவலையினிதீரவுன்
கருணா கடாட்சமுடனே
கனயோக ஞானமது சேவடி கடந்து நீர்
காத்து ரட்சித் தருளவே
இட்டகுல தெய்வம் நீர் எந்தனது உள்ளத்து
இருந்து விளையாடுமவனீ
இன்ப சுகபோகமுஞ் சம்போகமும்
ஏகாந்த வைபோகமு நீ
துட்ட கதி காலமது வென்னை வந்தணுகாது
துணையாக ரத மேறியே
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

தங்கமுங்கனக கோபுர விமானமுஞ்
சதுர்வேத மேற் கலசமுத
தளதளென மின்ன வொளியான நவரத்னந்
தரித்த மதி வரிகம்பமும்
அங்கமுறுதாக்கலுறு மனவேகமுங் குதிரை
யாங்கார வோங்காரமா
யைந்தெழுத்தாய் நின்ற மந்த்ர சொரூபமதில்
அருணனே சாரதியுமாய்ச்
சங்கமு மென்னுள்ளே வண்டில் கட்டாணியை
தியானமதனா லிருக்குந்
தினந்தினமு மெந்தனிட சிந்தையி லிருந்தருள
திகம்பரமுமான பொருளே
துங்கபரி பூரண விலாச வொளியாகவே
சுயம்பு ரதமீமேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.

நவக்கிரக ஸ்தோத்திரம்

காப்பு-வெண்பா

மண்ணுளுயிர்கட்கனைத்து மாறாதளித்து நல
நண்ணு நவக்ரக நண்பு சொல தண்ணுலவு
திங்களணி தங்குமுயர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையரு ளைங்கரனார் காப்பு.

சூரியன்

காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.

சந்திரன்

அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.

செவ்வாய்

வசனம்நல் தைரி யந்தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர வர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி.

புதன்

மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.

பிரகஸ்பதி

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

சுக்கிரன்

மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.

சனி

முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.

ராகு

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.

கேது

மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
போது நீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பாயே.

பொது

சூரியன் சோமன் செவ்வாய்
சொற்புதன் வியாழம் வெள்ளி
காரிய மிராகு கேது
கடவுள ரொன்பானாமத்
காரியல் சக்கரத்தைத்
தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திரருண்டாம்
பாக்கியம் நல்குந்தானே.

சூரியன்  போற்றி

ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி

ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி

ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி

ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி

ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி

ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி

ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி

ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி

ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி

ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி

ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி

ஓம் சூர்யதேவாய நம!

சூரியோதயம் (வீரசோழியம்)

வேலை மடற்றாழை வெண்டோட்டிடைக்கிடந்து
மாலைத் துயின்ற மணிவண்டு  காலைத்
துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.      

(வேறு)

இரவிடை மதியம் என்பான்
நாடிப்போய் மறையும் எல்லை
விரியிருள் எழினி நீக்கி
விசும்பெனும் அரங்கு தன்மேல்
கரைகடல் முழவம் ஆர்ப்பக்
கதிரெனும் கைகள் வட்டித்து
எரிகதிர் என்னும் கூத்தன்
ஆடுவான் எழுந்து போந்தான்.

சூரிய பகவான்

(தண்டியலங்காரம்)

முன்னங் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னுந் திலகம்போல் வாளிரவி  பொன்னகலந்
தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல்
அங்கணு லகளந்தார்க் காம்.

 
மேலும் சூர்ய புராணம் »
temple
தக தகவென்று தங்கத் தாம்பாளம் போன்று ஜொலித்துக் கொண்டு ஆயிரம் கிரணங்களோடு கீழ்த்திசையில் சூரியன் ... மேலும்
 
temple
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் ... மேலும்
 
temple
19. ஆலயப் பிரதிஷ்டை: வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ராஜன், மகர் எனப்படும் ... மேலும்
 
temple
சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் ... மேலும்
 
temple
சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.