பதிவு செய்த நாள்
22
ஜூன்
2012
10:06
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று கொடிமரம், கருடாழ்வர், பலிபீடம் ஆகியவைக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.சேலம், செவ்வாய்ப்பேட்டை, தெய்வநாயகம் தெருவில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று கொடிமரம், கருடாழ்வர், பலிபீடம் ஆகியவைக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் முதல்கால யாகசால பூஜை, அனுக்ஞை, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணமும், யாகசாலை பிரவேசம், ஜலாவதிவாஸம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மூன்றாம் கால யாகசால பூஜை, தத்வத்யாஸ ஹோமம், யாத்ராதானம், கும்ப உத்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. புனித நீரை கொண்டு கொடிமரம், கருடாழ்வர், பலிபீடத்துக்கு கும்பாபிஷேகம் செய்து, திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, மஹா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில், உதவி ஆணையர் வரதராஜன், நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார், தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் ராஜ்கணேஜ், செயலாளர் குரு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.