சேலம்: சேலம், அழகாபுரம் பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வர ஆஸ்ரமத்தில் மூலவர் வெங்கடேஸ பெருமானுக்கு, வைரமுடி சேவை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மஹா சங்கல்பம், கலச ஆவாஹனம், உற்சவருக்கு விசேஷ திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு பத்மாவதி ஸமேத வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், உள் புறப்பாடும், ஏகாந்த சேவை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.