பதிவு செய்த நாள்
04
ஆக
2021
04:08
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் பூஜை செய்து புதுத்தாலி கட்டிக் கொண்டனர். வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கந்தகோட்டம் முருகன், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
செந்துறை: செந்துறை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி 18 சிறப்பு பூஜை நடந்தது. முருக பெருமானுக்கு பாலாபிஷேகத்தை பூஜைகள், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. ஆடிப்பெருக்கில் புதிதாக தாலி மாற்றிய பெண்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். வாழை, கொய்யா பழங்களை குரங்குகளுக்கு வழங்கினர்.
நிலக்கோட்டை: குலதெய்வ வழிபாட்டிற்கு தடை இல்லாததால் வாகனங்களில் பலர் குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு திரும்பினர். புதுமண தம்பதிகளும் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்ததால் குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமைந்து விட்டது. அணைப்பட்டி வைகையாற்றில் அப்பகுதி கிராமத்தினர் புனித நீராடி ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தனர். கோயிலில் தரிசனத்திற்கு தடை விதித்ததால் மூடப்பட்டது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி பக்தர்கள் கோயிலுக்கு வெளியே சூடம் ஏற்றி வழிபட்டனர்.
கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. தருமத்துப்பட்டி, தெத்துப்பட்டி, ரெட்டியார்சத்திரம், கொத்தபுள்ளி, சின்னாளபட்டி கோயில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரிய மாரியம்மன், காளியம்மன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், பண்ணைக்காடு மயான காளியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு, ஊத்து பூதநாச்சியம்மன் மற்றும் கிராமங்களில் உள்ள குலதெய்வ வழிபாடுகள் செய்யப்பட்டன.