பதிவு செய்த நாள்
04
ஆக
2021
04:08
கோவை: ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி, கோவையிலுள்ள கோவில்களில், உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.கோவை கோனியம்மன் கோவிலில், அதிகாலை முதல் கால பூஜைக்கு முன்னதாக உழவாரப்பணிகளை, கோவில் பணியாளர்கள் துவக்கினர். அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளில், மின்மோட்டார் ரப்பர் டியூப் சகிதமாக கிருமிநாசினி கலந்த தண்ணீரை கொண்டு பீய்ச்சி அடித்து, கோவிலிலுள்ள பக்கவாட்டு பகுதி மற்றும் மேல்தளச்சுவர்களை சுத்தப்படுத்தினர்.கருவறையில் பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்கு, வெட்டிவேர், தசாங்கப்பொடி, மஞ்சள்துாள் ஆகியவற்றை கலவையாக, தண்ணீரில் சேர்த்து துாய்மைப்படுத்தினர்.ஈச்சனாரி விநாயகர் கோவில்களில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கோவில் சுற்றுப்பகுதி அனைத்துப்பகுதிகளையும், கோவில் பணியாளர்கள் தண்ணீர் பீய்ச்சி துாய்மைப்படுத்தினர். இதே போல், கோவையிலுள்ள அனைத்து கோவில்களிலும் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.