பதிவு செய்த நாள்
05
ஆக
2021
02:08
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைவம் நடந்தது. கோயிலில் அம்மன் சன்னதியில் ஆடிப்பூரத்திருநாள் நடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
4ம் திருநாளான நேற்று ந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வம் நடந்தது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை, 11 மணிக்கு அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு உற்சவத்திற்கு வளையல்கள், மஞ்சள், சீர்வரிசைப் பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர். வளையல்கள் அணிவிக்கப்பட்டதும் அம்பாள், சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு அம்பாள் உட்பிரகார உலா நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் கோயில் முன் நின்று வழிபட்டு வீடு திரும்பினர். 10ம் திருநாள் (10ம் தேதி) 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமராஜா, பணியாளர்கள் செய்துள்ளனர்.