பதிவு செய்த நாள்
11
ஆக
2021
03:08
அன்னூர் : அன்னூர் வட்டாரத்தில் பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடி மாதம் பூர நட்சத்திர நாளன்று ஆண்டாள் அவதரித்தார். எனவே, ஆடிப்பூரம் நாளன்று ஆண்டாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அன்னூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் சமேதரராக, உற்சவ கோலத்தில் அருள்பாலித்தார். செட்டிபாளையத்தில் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.