பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள புதர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.பகல் நேரங்களில் புதர் பகுதியில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளுக்கு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இப்பகுதியில் யானைகளை கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு வந்த யானைகள் இங்குள்ள காங்குடையார் கோவில் வளாகத்திற்கு வந்த யானைகள்,கோவில் முன்பாக இருந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.தொடர்ந்து குடியிருப்புகளை விட்டு முகாமிட்டு உள்ளதால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில் அச்சத்தில் உள்ளனர்.