சோழமாதேவி சிவன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 04:08
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே சோழமாதேவி சிவன் கோவில் ஆடிப்பூர திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன.
மடத்துக்குளம் அருகே சோழமாதேவி குங்குமவள்ளி உடனமர்குலசேகர சாமி கோவில் விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர்களால் கற்றளி முறை யில் அமைக்கப்பட்ட இந்தக் கோவில் பல வரலாற்று சிறப்புகள் உடையது. மன்னர்கள் ஆட்சியின் போது சோழ (ன்) மாதேவி அதாவது சோழ ராணியின் பெ யரால் இந்த கிராமம் உருவாக்கப்பட்டு, இந்தக் கோவிலும் கட்டப்பட்டது. பல நூ ற்றாண்டுகளை கடந்தும் இந்த கோவிலி ல் தொடர்ந்துபூஜைகள் நடந்து வருகிறது.
சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட, வி சேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப் பது வழக்கம். நேற்று இந்த கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. இதுகுறித்து குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகர சாமி அறக்கட்டளை யினர் கூறியதாவது:" பக்தர்கள் வழிபட போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகிறோம். அனைவருக்கும் கி ருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக் கிறோம். ஆடிப்பூரதிருவிழாவில் அம்மனு ம் குலசேகர சுவாமியும் சிறப்பாக அலங்க ரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித் தனர்" என தெரிவித்தனர்.