புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.புதுச்சேரி, கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 32ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நடந்தது.காலை 10:00 மணிக்கு கோவில் மகா மண்டபத்தில் யாகசாலை பூஜை, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாகாத்தம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.