வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன் னிட்டு, காமாட்சியம்மனுக்கு வளையல் அணியும் உற்சவம் நடந்தது.திருக்காஞ்சியில் உள்ள காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களில், தினமும் காலை 7;00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு காமாட்சி அம்மன் உள் புறப்பாடு நடைபெற்றது.நேற்று ஆடிபூரத்தை முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவிக்கும் விழா நடந்தது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் சீத்தாராமன், தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்தனர்.