Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய ... வழக்கில் வெற்றி கிடைக்க என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
தீர்க்க சுமங்கலி பவா என்றால் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீர்க்க சுமங்கலி பவா என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

12 ஆக
2021
04:08

தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம் திருமணத்தில் ஒன்று 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று, 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று, 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று, 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று. ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன . உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும் கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும் ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும். பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar