பதிவு செய்த நாள்
23
ஆக
2021
03:08
பொள்ளாச்சி: அழகு நாச்சியம்மன் கோவிலில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி மரப்பேட்டை பாலம் அருகிலுள்ள அழகு நாச்சியம்மன் கோவில், வரலாற்றுடன் தொடர்புடைய பழமையான கோவிலாகும். இக்கோவிலில், பவுர்ணமிகளில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
நேற்று, ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடத்தப்பட்டன. வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பவுர்ணமி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது.ஹயக்ரீவர் ஜெயந்திஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில், ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், ஹயக்ரீவர் ஜெயந்தியையொட்டி, லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், நேற்று காலை முதல் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, ஹயக்ரீவரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். - நிருபர் குழு -