திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் இன்று தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 10:09
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக, பிரதான கோவில்களில் மக்கள் அதிக அளவில் கூட, அரசு தடை விதித்து உள்ளது. இன்று அமாவாசை தினம் என்பதால், திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அரசின் உத்தரவு காரணமாக, வீரராகவர் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என, கோவில் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.