புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடையில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 10:09
புதுச்சேரி: புதுச்சேரியில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடையில்லை, என, கவர்னர் தமிழிசை கூறினார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. வரும் 10ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழல் உள்ள தால், தமிழகத்தில் இந்தாண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுபோல புதுச்சேரியிலும் தடை விதிக்கப்படுமோ என்ற சந்தேகம் நிலவியது.இந்நிலையில், கவர்னர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் ஒன்றும் தொற்று அதிகரிக்கவில்லை.
கோவில்களில் மக்கள் கட்டுப்பாட்டுடன் கூடுவதால் தொற்று பரவுவதில்லை. புதுச்சேரியில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. வரும் 10ம் தேதி, தெலுங்கானாவில் மிக பிரமாண்டமான விநாயகர் சிலையை நான் திறந்து, பூஜையை துவக்கி வைக்க உள்ளேன். புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை ஏதும் இல்லை.இவ்வாறு கவர்னர் கூறினார்.