Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமண யோகம் தரும் தரும் ... விநாயகர் சதுர்த்தியன்று எவ்வாறு வழிபட வேண்டும்? விநாயகர் சதுர்த்தியன்று எவ்வாறு ...
முதல் பக்கம் » துளிகள்
எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2021
01:09


எதிரிகளால் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகிறீர்களா....உங்களுக்கு தீர்வு அளிக்க காத்திருக்கிறார் சிந்தாமணி விநாயகர். சுயம்பு வடிவில் இருக்கும் இவரது கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள தேவூரில் உள்ளது.     
அபிஜித் என்னும் மன்னருக்கும், ராணி குணவதிக்கும் நீண்ட காலமாக குழந்தையில்லை. வைசம்பாயனர் என்னும் முனிவரின் ஆலோசனைப்படி யாகம் நடத்த ஆண் குழந்தை பிறந்தது. கணராஜா என பெயரிட்டு வளர்த்தனர். இளைஞனாக வளர்ந்த கணராஜா ஒருமுறை படைவீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். ஓய்வு எடுக்க விரும்பிய அவன், அருகில் இருந்த கபில முனிவர் ஆஸ்ரமத்திற்குச் சென்றான். கணராஜா உள்ளிட்ட அனைவருக்கும் அறுசுவை உணவை வழங்கினார் முனிவர். கணராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. விருப்பத்தை நிறைவேற்றும் சிந்தாமணி என்னும் ஆபரணம் ஒன்று முனிவரிடம் இருப்பதே இதற்கு காரணம் என்பதை அறிந்தான். அதை முனிவரிடம் இருந்து  அபகரித்து தப்பித்தான். வருத்தம் அடைந்த முனிவர் ஆபரணத்தை மீட்டுத் தரும்படி துர்கையைச் சரணடைந்தார். ‘48 நாட்கள் விநாயகரை வழிபட்டால் பிரச்னை தீரும்’ என அசரீரி ஒலித்தது. முனிவரும் வழிபாடு செய்யவே, விநாயகர்   ஆபரணத்தை மீ்ட்டுக் கொடுத்தார். ஆனால் தன்னிடம் இருப்பதை விட, விநாயகரிடம் இருப்பதே பொருத்தமானது என ஒப்படைத்தார் முனிவர். சிந்தாமணியை சூடியதால் விநாயகர் ‘சிந்தாமணி விநாயகர்’ எனப் பெயர் பெற்றார். அவருக்கு இங்கு கோயில் கட்டப்பட்டது.
சிந்தாமணி என்பதற்கு கவலையைப் போக்கி நல்வாழ்வு தருபவர் என்றும் பொருள் உண்டு. சதுர்த்தி திதியன்று விரதமிருந்து தரிசிப்பது சிறப்பு. கைகளை குவித்து வழிபடுவது வழக்கம். ஆனால் இங்கோ கைதட்டியபடி  வழிபடுகின்றனர். சிறிய லிங்க வடிவில் இங்குள்ள சிவபெருமானுக்கு அபிேஷகம், பூஜையை பக்தர்களே  செய்கின்றனர். ‘மம்மா தேவி’ என்னும் பெயரில் பார்வதிக்கு பளிங்கு சிலை உள்ளது.
எப்படி செல்வது: புனேவில் இருந்து சோலாப்பூர் சாலையில் 22 கி.மீ., துாரத்தில் லோனி. அங்கிருந்து 3 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar