விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2021 09:09
பிள்ளயைார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாமல் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். கொரோனா அரசு விதிகளின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலினுள் விழா உற்ஸவங்கள் நடந்து வருகிறது. இன்று விழா நிறைவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி தீர்த்தவாரி காலை 9:00 மணிக்கு துவங்கியது. உற்ஸவம், சண்டிகேஸ்வரர் வடக்குவாசல் எழுந்தருளலும், அங்குசத்தேவர் படித்துறையில் எழுந்தருளி அபிேஷக, ஆராதானைகள் நடைபெற்று தீர்த்தவாரியும் நடைபெறும். பின்னர் கோயிலினுள் உற்ஸவர் எழுந்தருளுவார். பின்னர் மதியம் 1:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் உற்ஸவர்கள் சண்டிகேஸ்வரர், கற்பகவிநாயகர்,சோமஸ்கந்தர்,தனி அம்மன்,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோர் எழுந்தருளலும் நடைபெறும். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.