பதிவு செய்த நாள்
11
செப்
2021
06:09
புதுச்சேரி: புதுச்சேரியில் வழக்க மான உற்சாகத்துடன் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு வாங்கி சென்று பூஜை செய்து வழிப்பட்டனர்.சாரம், நெல்லித்தோப்பு, பெரிய மார்கெட் உள்ளிட்ட இடங்களில், விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூ, பழங்கள், விநாயகர் சிலை விற்பனை ஜோராக நடந்தது.பெரிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. பெரும்பாலன இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை. சில இடங்களில் மட்டுமே பெரிய விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடந்தது.புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயின் சுவிட்ஸ் கடையில், 101 கிலோ மெகா சைஸ் லட்டு செய்து, விநாயகரை வழிபட்டனர். 3 நாள் பூஜைக்கு பின்பு, இந்த லட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக இந்த ஸ்வீட்ஸ் ஸ்டால், விநாயகர் சதுர்த்திக்கு, மெகா சைஸ் லட்டு தயாரித்து வழிபடுவது வழக்கம்.சாரம் காமராஜர் சாலையில் உள்ள புட்லாய் அம்மன் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு 300 லட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது.