பதிவு செய்த நாள்
16
செப்
2021
10:09
மைசூரு: தசரா யானைகள் மற்றும் பாகன்களுக்கு, மைசூரு மாவட்ட நிர்வாகம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.
ஆண் யானைகளுக்கு, 3.50 லட்சம் ரூபாய், பெண் யானைகளுக்கு 2.50 லட்சம் ரூபாய், யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. மைசூரு நகரின், வன பவனில் முகாமிட்டுள்ள தசரா யானைகளை பார்க்க, மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். ஆனால் கொரோனா 3வது அலை பீதியால், வன பவனில் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் இன்று, மைசூரு அரண்மனைக்கு வருகை தருகின்றன. அங்கும் கூட பொது மக்களின் நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை மனதில் கொண்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, வனத்துறை திட்டமிட்டுள்ளது. பாகன்கள், உதவியாளர்களில் பலரும், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர். யானைகளுக்கு ஊட்டச் சத்தான உணவு தரப்படுகிறது.வழக்கம் போல இம்முறையும் யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் இன்சூரன்ஸ் செய்துள்ளது. ஆண் யானைகளுக்கு, 3.50 லட்சம் ரூபாய், பெண் யானைகளுக்கு 2.50 லட்சம் ரூபாய், யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.யானைகளால் பொது மக்களின் சொத்துக்களுக்கு, சேதம் ஏற்பட்டால், நஷ்டஈடு வழங்கவும் 30 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.