திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் நடக்கும். இதில், திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாத உத்திர நடச்சத்திரத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும் மிகவும் விஷேஷமாகும். நேற்று ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ பெருமாள் சமேத சிவகாமி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து, மாட வீதி உலா நடந்தது.