கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2021 01:09
மயிலாடுதுறை : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாட சாலையில் நடந்த மகாளயபட்ச சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், 201 மோட்ச தீபம் ஏற்றி, ‘தினமலர்’திருச்சி பதிப்பு வெளியீட்டாளரும், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவரும், தெய்வீக கைங்கர்ய பேரவைத்தலை வருமான ஆர்ஆர்.கோபால்ஜி, பாட சாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க துணைத் தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பா.ஜ., நகர தலை வர் கண்ணன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.