புலியூர்குறிச்சி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2021 02:10
தக்கலை: புலியூர்குறிச்சி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய பெ ருவிழா, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மூன்று நாட்கள் எளிமையாக நடந்தது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாள் பங்கு பணியாளர் மரிய ராஜேந்திரன் தலைமையில் கொடி பவனி நடந்தது. தொடர்ந்து செட்டிசார் விளை பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் கொடியேற்றி ஆசியுரை வழங்கினார். ஆன்மீக தந்தை மரியதாசன் பேசினார். இரண்டாம் நாள் நடந்த தேர்ப்பவனிக்குப்பின் குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. முளகு மூடு பங்கு உதவி பங்கு தந்தை தாமஸ் உரை யாற்றினார். மூன்றாம் நாள் திருவிழாவை தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் திருப்பலியை நடத்தினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பேரவை துணை தலைவர் புரோடிமில்லர், செயலாளர் ஜெகதா, துணைச் செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் ஜான் பென்னட் மற்றும் பல்வேறு துணை அமைப்புகள் இணைந் து செய் திருந்தது. விழாவில் பங்கு மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.