பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் மூலம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 70 ரூபாய் காணிக்கை கிடைத்தது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு நேற்று மூன்று உண்டியல்கள் திறப்பு நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமை தாங்கினார். கோவில் ஆய்வாளர் ஜெயராமன், முன்னாள் அறங்காவலர் சபாபதி, தொழிலதிபர் காத்தவராயன், சபாபதி, ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி கல்வி அலுவலர் வரதராஜன், ஓதுவாமூர்த்தி ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.அன்னதான உண்டியலில் 18 ஆயிரத்து 87 ரூபாயும், கோவில் உண்டியலில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 70 ரூபாயும் இருந்தது.