வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இக்கோயிலில் தை, ஆடி , புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை வழிபாட்டில் பல்லாயிரக்காண பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக தரிசனம் செய்ய விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.இதையடுத்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார், தாணிப்பாறை, மகாராஜபுரம் விலக்கு, மாவூத்து பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை கோயிலுக்கு வந்த உள்ளூர் , வெளியூர் பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அமாவாசை வழிபாடு நடந்தது. இன்று நவராத்திரி வழிபாடு காப்புகட்டுஉற்ஸவத்துடன் துவங்குகிறது. அக். 15 வரை நடக்கும் இவ்விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துஉள்ளது.