திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2021 04:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்துடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டு, சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளினார்.