நெல்லையப்பர் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 04:10
திருநெல்வேலி-நெல்லையப்பர் கோயிலில் இந்த ஆண்டு முதல் ஓதுவார் பயிற்சி பள்ளியும், முதியோர் தங்கும் இல்லமும் துவக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் இந்த ஆண்டு 50 மாணவர்களுக்கு தேவாரம், திருமுறைகளில் ஓதுவதற்கு பயிற்சியளிக்கும் ஓதுவார் பள்ளி துவக்கப்பட உள்ளது. 13 முதல் 20 வயதுக்குள் குரல் வளம், உடல் தகுதியுள்ளவர்கள் சேரலாம். உணவு, உறைவிடம், சீருடையுடன் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இது 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி. பயிற்சி முடித்தவர்கள் தமிழக கோயில்களில் நியமிக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. நெல்லையப்பர் கோயில் சார்பில் 50 பேரை பராமரிக்கும் முதியோர் தங்கும் இல்லமும் துவக்கப்பட உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. அதுவரை இரண்டும் வாடகை கட்டடங்களில் செயல்படும் என கோயில் செயல்அலுவலர் ராமராஜ் தெரிவித்தார்.