சென்னை-விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று, கோவில்களை திறக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு: கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள்.எனவே, வெள்ளியன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.