திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஐப்பசி பிறப்பை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. கேரளாவில் வெள்ளம் செல்வதால் அங்கு செல்ல முடியாத மதுரை, திருப்பரங்குன்றம் பகுதி ஐயப்ப பக்தர்கள் இங்கு இரு முடி செலுத்தினர். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.