பதிவு செய்த நாள்
02
நவ
2021
02:11
அவிநாசி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை, கிறிஸ்தவர்கள், அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கின்றனர். இது, கல்லறை திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள், கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, கல்லறையை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, இறந்தவர்களின் ஆன்மா அமைதி கொள்ள சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தனர். வீடுகளிலும், உறவினர்கள் ஒன்றுகூடி, இறந்தவர்களின் நினைவாக பிரார்த்தனை ஏறெடுத்தனர். அவிநாசி புனித தோமையார் தேவாலயம், சேவூர் லூர்துபுரம் புனித லூர்து அன்னை தேவாலயம் உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள தேவாலயங்களில், இத்தகைய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கல்லறைத் தோட்டங்கள் மெழுகுதிரிகளால் ஒளிர்ந்தன.