திருப்பரங்குன்றம் கோயிலில் தீபவாளியன்று (நவ. 4ல்) 3 விழாக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2021 07:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 4 தீபவாளியன்று 3 விழாக்கள் நடக்கிறது.
தீபாவளி பூஜைகள்: காலையில் மூலவர்கள், உற்சவர்கள், கம்பத்தடி, மகா மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம், புத்தாடைகள் அணிவித்து பூஜைகள் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்: சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கும் சஷ்டி காப்பு கட்டப்படுகிறது.அமாவாசை பூஜை: கோயிலில் உச்சிகால பூஜைகள் முடிந்து அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டு தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.சஷ்டி திருவிழாவில் சுவாமிகளுக்கு மட்டுமே காப்பு கட்டப்படும். கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு காப்பு கட்டு இல்லை. சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.