திருச்செந்துார் கோயிலில் கந்த சஷ்டி விழா : தங்கசப்பரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2021 12:11
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா 2ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அறுபடைவீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக நடந்து வருகிறது. இவ்வாண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் நடந்தது. பின்பு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.