செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2021 01:11
ஆரல்வாய்மொழி: தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். வருகிற 9ம் தேதி அதிர்வேட்டு முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. 10ம் தேதி செக்கர்கிரி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், பச்சை சாத்து மற்றும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோவில் மகமை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.