கடலுார்: திருவந்திபுரம் மணவாளமாமுனிகள் கோவில் அவதார மகோற்சவ நிறைவு நாளான நேற்று ரத்னாங்கி சேவையில் சுவாமி அருள்பாலித்தார்.கடலுார் திருவந்திபுரத்தில் மணவாளமாமுனிகள் கோவிலில், அவதார மகோற்சவம் கடந்த 30ம் தேதி துவங்கியது. தினமும் காலை சுவாமி விதி புறப்பாடு, பகல் 11:00 மணிக்கு திருமஞ்சனம், கண்ணாடியரைக்கு எழுந்தருளி திருப்பாவை சாற்றுமுறை, மாலை 3:00 மணிக்கு உபன்யாசம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏழாம் தேதி தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று ரத்னாங்கி சேவையில் சுவாமி அருள்பாலித்தார்.