பதிவு செய்த நாள்
09
நவ
2021
12:11
கடையநல்லுார்: கிளாங்காடு நல்லமங்கை சமேத ஜமதக்னீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கிளாங்காடு நல்லமங்கை அம்பாள் சமேத ஜமதக்னீஸ்வரர் கோயிலில் விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, பள்ளிக்கூடம், பிள்ளையார் கோயில், பஞ்., அலுவலகம், அம்மன்கோயில் அருகில் என 4 வீதிகளில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை அர்ச்சகர்கள் வணன், பிரபு, கிருஷ்ணமூர்த்தி நடத்தினர். விழாவில் ஆலய கண்காணிப்பாளர் ரத்னவேல், கிளாங்காடு ஊர்நல கமிட்டிதலைவர் மணி, முன்னாள் பஞ்., தலைவர் பேச்சிமுத்து, ராமர் மற்றும் அனைத்து முதாயத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி விழா நடந்தது.