பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் அருள்மிகு சடா முனியப்பசாமி திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி திருவிழா ஊர்வலம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் வடக்கு, காமராஜ் நகரில் சடா முனியப்பசாமி திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. இந்நிகழ்வையொட்டி, சாமிசெட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து சடா முனியப்ப சாமி திருக்கோயிலுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.