பதிவு செய்த நாள்
10
நவ
2021
11:11
நாகர்கோவில்: ஈத்தாமொழி அருகேயுள்ள தென் காளஹஸ்தி கோயிலில் வரும் 13ம் தி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. நாகர்கோவில் ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான காளஹஸ்தி சிவன் கோயில் அமைந்துள்ளது. வரும் 13ம் தேதி .11 மணிக்கு ர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அவிட்டம் நட்சத்திரம் 3ம் தில் குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், மதியம் 12 ணிக்கு சனீஸ்வரர் அபிஷேக அலங்காரம், 12.30 மணிக்கு ஹஸ்தீஸ்வரருக்கு அபிஷேக அலங்காரம், அன்னதானம் நடக்கிறது. மாலை தட்சிணாமூர்த்திக்கு 1008 மூலமந்திரம், 13 வகை அபிஷேகம் நடைபெறும். அதே நேரத்தில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ள குரு பகவானுக்கு 13 வகை அபிஷேகம் குரு திரங்களோடு வழிபாடு நடத்தப்படுகிறது. மாலை 6.11 மணிக்கு குரு பெயர்ச்சியாகும் நேரத்தில் பஞ்ச விளக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். பின்னர் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசிகாரர்களுக்கு பரிகாரம், மேசம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிகாரர்களுக்கு அர்ச்சனை, 7 மணிக்கு மஞ்சள் பொங்கல் பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவிற்கு ஏகாம்பரம் தலைமை வகிக்கிறார். ஏற்பாடுகளை பக்தர் சேவா சங்க உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.