திண்டிவனம் திந்திணிரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2021 01:11
திண்டிவனம்: திந்திணிரீஸ்வரர் கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இவ்வாண்டிற்கான குருபெயர்ச்சி நேற்று மாலை நடந்தது. அதையொட்டி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 6:31மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். திண்டிவனம் திந்திணிரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நடந்த குரு பெயர்ச்சி விழாவில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, குரு பகவானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி குருபகவானை வழிபட்டனர்.