சோழவந்தான்: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன் உள்ள குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இங்கு சுயம்பாக குருபகவான் எழுந்தருளியுள்ளார். பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், சடகோபன், பாலாஜி குழுவினர் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜைகளை செய்தனர். குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், அய்யப்பன், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுறை, டி.ஆர்.ஓ.,செந்தில்குமாரி, தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.