சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் பெரியாண்டி கூட்டத்திற்கு பாத்தியப்பட்ட காசிவிஸ்வநாதன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. நவ.,14ல் கணபதி மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை துவங்கி முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 2ம் கால யாகசாலை, மண்டப பூஜையை தொடர்ந்து ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.