Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : கார்த்திகை ராசி பலன் விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன் விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

சித்திரை - 3, 4: எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் சமூகத்தில் தங்களின் மதிப்பு கூடும். எதிர்ப்பை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பர். வியாபார போட்டிகள் குறையும். பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்பு வந்து சேரும். வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தினர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவர். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு மகிழ்வர். சந்திராஷ்டமம்: நவ.18
அதிர்ஷ்ட நாள்: நவ. 29, 30
பரிகாரம்: சிவபெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும்.

சுவாதி: எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய சுவாதி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு ஏற்பட வாய்ப்புண்டு.  சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம்.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மையளிக்கும்.  பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை தேவை. பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அண்டை வீட்டாரின் ஒத்துழைப்பு நிம்மதி அளிக்கும்.   மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்  அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் நாட்டம் ஏற்படும். நண்பர்களுடன் சேர்ந்து பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
சந்திராஷ்டமம்: நவ.19
அதிர்ஷ்ட நாள்: நவ.30, டிச.1
பரிகாரம்: நரசிம்மரை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும்.

விசாகம் - 1, 2, 3 பார்வையாலேயே மற்றவர்களை பணிய வைக்கும் திறமை உடைய விசாக நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை  உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். பணிச்சுமையால் தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவதில் தாமதம் உண்டாகும்.  குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தொண்டர்களின் வகையில் பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.20
அதிர்ஷ்ட நாள்: டிச.1, 2
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கிவர கஷ்டம் நீங்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar