Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : கார்த்திகை ராசி பலன் துலாம் : கார்த்திகை ராசி பலன் துலாம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

உத்திரம் - 2, 3, 4 அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணமுடைய உத்திர நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் பணவரத்து கூடும். ஆன்மிக செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாற்று மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். அண்டை வீட்டாரின் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் உருவாகும்.  தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும். வளர்ச்சிக்குத் தேவையான வங்கி நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல் படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு இருந்த காரியத்தடை நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த  பணவரவு கிடைக்கும்.  அரசியல் துறையினருக்கு ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். செலவுக்கான பணம் சரியான நேரத்தில் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.17; டிச.14
அதிர்ஷ்ட நாள்: நவ. 27, 28
பரிகாரம்: துர்கையை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.  

அஸ்தம்: அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் அஸ்த நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது  கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்கள் வழியில் கூடுதல் பணம் செலழிப்பர். அரசியல்ரீதியான திடீர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: நவ.17; டிச.15
அதிர்ஷ்ட நாள்: நவ.28, 29
பரிகாரம்: ஐயப்பனை வணங்க பிரச்னைகள் மறையும்.  

சித்திரை - 1, 2: நுாதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிதானமாக இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். சக பணியாளர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.  அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்கள் அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பது அவசியம்.  மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றவும்.  
சந்திராஷ்டமம்: நவ.18
அதிர்ஷ்ட நாள்: நவ.29, 30
பரிகாரம்: முருகனை வணங்கி வர நிம்மதி கூடும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar