உடன்குடி: உடன்குடி அருகே கந்தபுரத்தில் நாளை (3ம் தேதி) ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா நிகழ்ச்சி நடக்கிறது. கந்தபுரம் ஷீரடிசாய்பாபா ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் குருபூர்ணிமா விழாவையொட்டி நாளை (3ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை 6மணி, 8 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு குருபூர்ணிமா சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தியும், சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் டிரஸ்ட் சார்பில் செய்து வருகின்றனர்.