அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே அ.கோவில்பட்டி ஸ்ரீ நரசிங்கப்பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2 நாட்கள் நடந்தது.சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கிராம மக்கள் வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பூஜை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு மலை உச்சியில் உள்ள தீபக் கொப்பரையில் நெய் ஊற்றி மஹாதீபம் ஏற்றினர். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பின் கோயில் அருகே சொக்கப்பனை கொளுத்தினர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.