அன்னுார்: குப்பேபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குப்பேபாளையத்தில் பழமையான மாரியம்மன் கோவிலில், புதிதாக திருச்சுற்று மண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. 22ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 23ம் தேதி மதியம் கலசங்கள் நிறுவுதல், இரவு எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நே ற்றுமுன்தினம் காலை 7:00 மணிக்கு கோவில் கோபுரம் மற்றும் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசலஅடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபரஅடிகள், பழனி சண்முக அடிகள் அருளுரை வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் வேள்வி பூஜைகளை செய்தனர்.