புதுச்சேரி கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனைக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2021 03:12
புதுச்சேரி : புதுச்சேரி கோவில்களில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பக்தர்கள் அர்ச்சனைக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என, அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, கோவில்களில் இரவு 10.௦௦ மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தினர் மட்டும் பூஜைகள் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், கோவில்களில் இரவு 10.00 மணி வரை பக்தர்கள் அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் திறப்பு நேரம் உள்ளிட்ட ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கோவில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.