திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2021 01:12
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா இன்று ( டிச.,4ல்) துவங்கியது.
சிவபக்தர்களான அரக்கர்கள் காசுரன், சம்பகாசூரன் ஆகியோரை அழித்த தோஷம் நீக்குவதற்காக பைரவர் யோகநிலையில் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறார். இதுவே இக்கோயிலில் சம்பக சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை அமாவாசை அடுத்து பிரதமை திதியன்று காப்புக் கட்டி 6 நாட்கள் அஷ்டபைரவர் யாகத்துடன் காலை, மாலை இருவேளைகளில் நடைபெறும். கொரோனா கட்டுபாடுகளின்படி இன்று துவங்கிய சம்பகசஷ்டி விழாவில் யாகம் நடைபெறவில்லை. காலையில் மட்டும் மூலவருக்கு 12:00 மணிக்கு அபிஷேகம் மட்டும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் யோகபைரவர் அருள்பாலித்தலும், தீபாராதனையும் நடைபெறும். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடலாம். டிச.9ல் விழா நிறைவடையும். ஏற்பாட்டினை குன்றக்குடி தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.