திருவாடானை : சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் கோயில்களில் கார்த்திகை சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சந்தனம், பால், பன்னீர்உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள்நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.